சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை 24 ஆம் திகதி வரை நீடிக்கும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பெரும்பாலான இடங்களில் பெய்துவரும் அடை மழை காரணமாக நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஜின்கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தவளம மற்றும் பத்தேகம ஆகிய பிரதேசங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக காலி மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

உலக தலசீமியா தினம் இன்று

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்