சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையினால் 5 பேர் உயிரிழப்பு: 10,000 மேற்பட்டோர் பாதிப்பு…

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையில் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10,000ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பதுளை, களுத்துறை, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அனர்த்தம் தொடர்ந்து அமுலில் இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளையும் வழுவடைய கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையில் காரணமாக நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலநிலையினால் காலி, களுத்துறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 6089 குடும்பங்களை சேர்ந்த 23,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதிராஜா தெரிவித்துள்ளார்.

முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையும் 9 ஆகும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 297ஆகும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 நலன் பூரி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் தங்கியுள்ளனர். இதேவேளை எத்தகைய திடீர் அனர்த்த நிலையையும் எதிர்கொள்வதற்காக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான மனு நிராகரிப்பு

அக்குறணை வெள்ளப் பிரச்சனைக்கு விசேட செயலணி

கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது