உள்நாடு

சீமெந்து விலை மீண்டும் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு சீமெந்து விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி தற்போது சந்தையில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டை ரூ.2,300 – 2,350 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், புதிய சீமெந்தின் விலையை ரூ.500-600 வரை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

சீமெந்து விலை உயர்வால் தேவை குறைந்துள்ளதாகவும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் கடைகளில் சீமெந்து இருப்பு வைக்கப்படுவதில்லை எனவும் ஹட்டன் பிரதேச சீமெந்து வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு

ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்