உள்நாடு

சீமெந்து கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்வு

(UTV | கொழும்பு) – மின்கட்டண உயர்வால் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதால், சீமெந்து கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஒரு சீமெந்து கல்லின் விலை 1,000 ரூபாவாக இருந்ததாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பால் எதிர்வரும் நாட்களில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு கட்டை கல்லின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையால் கட்டுமானத் தொழில் தொடர்பான அனைத்து தொழில்களும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அத்தொழிலில் பணிபுரியும் ஐம்பத்தைந்து இலட்சம் பேரின் வேலைவாய்ப்பிலும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத் துறை 52 சதவீத பங்களிப்பை வழங்குவதாகவும், இந்த சிக்கலான சூழ்நிலையில் அரசு பெறும் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் இந்த பாரிய பிரச்சினையை சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் இப்பிரச்சினைக்கு திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், இந்நாட்டில் நிர்மாணத்துறை முற்றாக வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு

இ.போ.தொழிலாளர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை