கேளிக்கை

சீமராஜா பட சிறப்பு காட்சி ரத்தானது…

(UTV|INDIA)-பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. சீமராஜா திரைப்படம் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சி இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் தியேட்டர்களில் படத்தை காணவந்த ரசிகர்கள் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து தியேட்டர்களின் உரிமையாளரிடம் கேட்ட போது, எங்களுக்கு படத்துக்கான லைசென்ஸ் வரவில்லை. எனவே படத்தை திரையிட முடியவில்லை என தெரிவித்தனர்.
சீமராஜா படத்தை காண ஆன்-லைனில் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு அவர்களது கணக்கில் பணம் திரும்ப செலுத்தப்பட்டு விடும். கவுன்டரில் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என தெரிவித்தனர்.
சிவகார்த்திகேயன் படத்தை காண வந்த ரசிகர்கள் படம் திரையிடப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஐஸ்வர்யா ராய்

நடிகையாகிறார் பிரபல விளையாட்டு வீராங்கனை?