உள்நாடு

சீன பெற்றோல் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்?

(UTV | கொழும்பு) –

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் சினோபெக் ஒக்டேன் 92 பெற்றோலை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இவ்வாறு எரிபொருள் தேவை குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீனா சினோபெக் நிறுவனம் ஒக்டேன்ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலினை 358 ரூபாவிற்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனம் ஆகியவை ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலினை 365 ரூபாவிற்கும் விற்பனை செய்கிறது.

இந்நிலைமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இதுவரையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏறக்குறைய 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. எவ்வாறாயினும், தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் எரிபொருள் பிரிவினையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினோபெக் நிறுவனம் முன்வைத்த ஒப்பந்தங்களை அவர்கள் பணிகளை தொடங்கும் முன் பூர்த்தி செய்யாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சினோபெக் குறைந்த விலையில் எரிபொருளை விற்கும்போது, ​​பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனங்கள் அதிக விலைக்கு எரிபொருளை விற்பது நியாயமற்றது என பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோலியம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படாததால், அதற்கு எதிராக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

முதல் Green Super Supermarket இலங்கையில்

பிரதமரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு