வகைப்படுத்தப்படாத

சீன நாட்டு பெண் ஒருவரின் பணம் கொள்ளை ; 2 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை பிரதேசத்தில் சீன நாட்டு பெண் ஒருவரின் ஒரு கோடி 54 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் நேற்றைய தினம் கோட்டை பிரதேசத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணிக்க முற்பட்டுள்ள நிலையில் சில நபர்களினால் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் கம்பஹா காவற்துறையில் உத்தியோகஸ்தராக பணி புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பு

வத்தளையில் கடைத் தொகுதி ஒன்று தீயில் எரிந்து சாம்பலானது

US brings in new fast-track deportation rule