(UTV | கொழும்பு) – சீனாவின் சேதனப் பசளை தொடர்பாக வௌியிடப்பட்ட பரிசோதனை அறிக்கையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி 08 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி ‘Qingdao Seawin Biotech’ நிறுவனம் அனுப்பிய கோரிக்கை கடிதம், தேசிய தாவரவியல் தடுப்புக்காப்பு சேவைக்கு கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த பரிசோதனை சர்வதேச தரங்களுக்கு அமைவாகவே இடம்பெற்றது என்ற நிலைப்பாட்டில் தாம் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய தாவரவியல் தடுப்புக்காப்பு சேவையின் மேலதிக பணிப்பாளர், கலாநிதி W. N. R. விக்ரமஆரச்சி தெரிவித்தார்.
அனைத்து ஆய்வுகூட பரிசோதனைகளிலும் சர்வதேச நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)