அரசியல்உள்நாடு

சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி – அமைச்சர் விஜித ஹேரத்

இராஜதந்திர உறவுகளில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமமான முறையில் செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இந்தியாவை போலவே சீனாவையும் கையாளுவதாக தெரிவித்தார்.

சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கப்பல் இம்மாதம் இந்நாட்டுக்கு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

“நாம் எந்த நாட்டையும் சிறப்பானதாகக் கருதவில்லை. நாடு சிறியதோ பெரியதோ, அனைத்து நாடுகளுடனும் இலங்கை இராஜதந்திர உறவுகளைப் பேணுகிறது. எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.

சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளோம். இந்தியாவை போலவே சீனாவையும் கையாளுகிறோம். சீனா ஊடாக விகாரைகளுக்கு சோலார் பேனல்களை வழங்கும் திட்டம் உள்ளது. அதில் தலையிடுகிறோம்.

இம்மாதம் இன்னும் சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.
அதற்கான அனுமதியை வழங்கியுள்ளோம். இதனால் இலங்கையின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

முன்னதாக, அமெரிக்க, இந்திய மற்றும் ஜெர்மன் போர்க்கப்பல்கள் வந்துள்ளன. இதுபோன்ற இராஜதந்திர உறவுகளில், அனைத்து நாடுகளுடனும் சமமாக நடந்து கொள்கிறோம்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு

பொருத்தமான நபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று