உள்நாடு

சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணை

(UTV | கொழும்பு) – சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வரி வருமானத்தில் 15 பில்லியனுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் கூறியுள்ளார்.

Related posts

இதுவரையில் 19,032 பேர் பூரண சுகம்

மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4,945 முறைப்பாடுகள் பதிவு.

editor