உள்நாடு

சீனி, தேங்காய் எண்ணெய் ஊழல்களை மறைக்கவா ரிஷாதின் கைது? [VIDEO]

(UTV | புத்தளம்) –  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் கைதினை கண்டித்து எதிர்ப்பினைக் காட்டும் விதமாக புத்தளம் நகரில் இன்று(04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுலோக அட்டைகளையும், பதாதைகளையும் தாங்கியவாறு, சமூக இடைவெளிகளை பின்பற்றி, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாகவே, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

எந்தவிதமான, காரணங்களும் கூறாமல், வெறுமனே ஊகத்தின் அடிப்படையில், தமது பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டது, நீதிக்கு முரணானது எனவும், சட்டத்துக்கு விரோதமானது எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறித்த இருவரையும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை(24) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வர்த்தக வலய ஊழியர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீற்றர் வரையான மழைவீழ்ச்சி

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு