உள்நாடு

சீனிக்கு இன்றும் நாளையும் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – நாட்டுக்கு தேவையான சீனியை இறக்குமதி செய்வதற்காக அதனுடன் தொடர்புடைய இறக்குமதியாளர்களுடன் இன்று மற்றும் நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனி இறக்குமதியை முன்னெடுக்க முடியவில்லை என, சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் சந்தையில் சீனி தட்டுப்பாடு நிலவுவதுடன், ஒரு கிலோகிராம் சீனி 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

Related posts

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் சிக்குண்டு ஒருவர் பலி – சாரதி கைது

ஒலிவ் எண்ணெய் விலை உயரும் அபாயம்

கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானார்