அரசியல்உள்நாடு

சீனா பயணித்தார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13) இரவு சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு பயணித்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

Related posts

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு

கொவிட் வர்த்தமானியில் பாராளுமன்றம் உள்வாங்கப்படவில்லை

எதிர்வரும் 9ம் திகதி மஹிந்த பதவியேற்பு