உலகம்

சீனா சவகாசம் : எரிந்தது நாடாளுமன்றம்

(UTV |  சாலமன் தீவு) – சாலமன் தீவுகளில் ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவுகள்.

இந்நாட்டின் பிரதமராக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் மானசே சோகவரே. இந்நிலையில் அண்மையில் இவர், தாய்வானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அரசின் இந்த முடிவை நாட்டின் பல்வேறு மாகாண அரசுகள் ஏற்க மறுத்தன. இதைத் தொடர்ந்து, பிரதமர் மானசே சோகவரேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தலைநகர் ஹோனியாராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை விரட்டியடிக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.

இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கும், அதன் அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கும் தீவைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மீட்புப் படையினர்

சர்ச்சையில் ‘ஜெக் மா’

கேரள தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மிரட்டல்!