வகைப்படுத்தப்படாத

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவில் அதிகரிக்கும் சனத்தொகை

(UTV|INDIA) இந்திய சனத்தொகை சீனாவை விட 2 மடங்கு வேகத்தில்  அதிகரித்து  வருவதாக ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சனத்தொகை குறித்து ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம்  கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2018 இல் உலக சனத்தொகை 760 கோடியாக இருந்த நிலையில், 2019 இல் 770 கோடியா அதிகரித்துள்ளது.
இந்திய சனத்தொகை 2010 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
எனவே, சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவின் சனத்தொகை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியத்தின் இந்தியாவுக்கான அதிகாரி கிளாஸ் பெக் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் பிறப்புவீதம் அதிகரிக்கும் அதேநேரத்தில் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Boris Johnson’s Brexit policy ‘unacceptable’ – EU negotiator

Rail commuters stranded due to train strike

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம்