உலகம்

சீனாவுக்கு எதிராக எழுதிய Jimmy Lai கைது

(UTV | சீனா) – சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்தது மற்றும் இதன் நீட்சியாக வெளிநாட்டினருடன் கூட்டு சதி என்ற குற்றச்சாட்டின் கீழ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஹாங்காங் பத்திரிகையின் தலைவர் ஜிம்மி லாய் (Jimmy Lai) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டு இருப்பதை அவரது ‘Apple Daily’ (ஆப்பிள் டெய்லி) என்ற சீன மொழியில் வெளிவரும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அடிபணிதல், பிரிவினை, பயங்கரவாதம் மற்றும் கூட்டு சதி ஆகியவற்றில் ஈடுபட்டதாக ஜிம்மி மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

ஹாங்காங் மீது சீனாவின் அடக்குமுறை, சீனாவின் சர்வாதிகாரம் ஆகியவற்றை தொடர்ந்து ஜிம்மி எழுதி வந்தார். ஹாங்காங்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தார். கடந்தாண்டு ஹாங்காங்கில் நடந்த புரட்சியை குறிப்பிட்டு கடுமையாக சீனாவுக்கு எதிராக விமர்சனம் செய்து இருந்தார்.

இதற்காகவும், இதற்கு முன்பு, ஹாங்காங்கில் சட்ட விரோதமாக கூடினார் என்ற குற்றத்தின் கீழ் 2019ல் ஜிம் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் நேற்று(10) கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவருடன் மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் 39 முதல் 72 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதற்கு முன்பு நியூயார்க் டைம்ஸில் எழுதி இருந்த ஜிம்மி, ”நான் தொடர்ந்து ஹாங்காங்கின் ஜனநாயகத்தை ஆதரித்து எழுதி வருகிறேன். இதனால் நான் ஒரு நாள் கைது செய்யப்படுவேன்.

ஹாங்காங்கின் பாதுகாப்பை வலிமை வாய்ந்த சீனா மிரட்டி வருகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஹாங்காங் நாட்டின் சட்ட திட்டங்களில் சீனா ஆளுமை செலுத்தி வருகிறது. சமீபத்தில் அந்த நாட்டின் மீது கடுமையான சட்டத்தை சீனா திணித்தது. இதை ஹாங்காங் மக்கள் எதிர்த்தனர். இதற்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

கடந்த ஜூலை முதல் அமலுக்கு வந்து இருக்கும் இந்த சிறப்பு சட்டத்தினால், பல்வேறு நாடுகள் அந்த நாட்டுடன் செய்து கொண்ட சில ஒப்பந்தங்களை இரத்து செய்து கொண்டன. கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் செய்து கொண்டு இருந்த குற்றவாளிகளை பரிமாறும் சட்டத்தை சீனா இரத்து செய்தது. இதற்கு அந்த நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கானில் பெண்களுக்கு தொடரும் தடை

வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது

 ஒடுக்குமுறை அனுபவிப்பவர்களுக்கு கனடா அடைக்கலம்!