உலகம்

சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து

(UTV|ரஷ்யா) – ரஷ்யாவின் எஸ் 7 ஏயார்லைன்ஸ் (S7 Airlines) சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் இன்று(01) இரத்து செய்துள்ளது.

அத்தோடு ரஷ்யாவில் உள்ள தனது நாட்டு பிரஜைகளை அழைத்து வரவும் ரஷ்யா சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 259 ஆக உயர்யர்ந்துள்ளதுடன் இதுவரை 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சீனாவில் தற்போது கொரோன வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ள காரணத்தால் ரஷ்யா இம் முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஓக்லாந்து நகர முடக்கமானது மேலும் நீடிப்பு

முகக்கவசம் அணியாத பிரதமருக்கு அபராதம்

டிக் டாக் மிரட்டலில் அடங்கியது அமெரிக்கா