உள்நாடு

சீனாவில் திட்டங்களை சீனாவுக்கு கொடுப்பதா இல்லையா?

(UTV | கொழும்பு) – கடனை செலுத்த முடியாத பட்சத்தில் சீன முதலீட்டில் இலங்கையின் வளங்களை இலவசமாக தள்ளுபடி செய்யுமாறு சீனா கூறியதாக வெளியான செய்தி தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, தாமரை கோபுரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற திட்டங்களை சீனாவுக்கு வழங்க வேண்டுமா என லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

யார் ஆட்சி செய்தாலும் இலங்கை அனைவரின் நாடு எனவும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் தெரிவித்தார்.

ஐம்பத்திரண்டு நிறுவனங்களை மறுசீரமைக்க முடியுமா என கேள்வி எழுப்பிய லக்ஷ்மன் கிரியெல்ல, அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு ஊழியர்களை தூக்கி எறிந்தால் அதற்கு எதிரானது எனவும் தெரிவித்திருந்தார்.

இன்று நாட்டின் பிரதான பிரச்சினையாக டொலர் பற்றாக்குறையே காணப்படுவதாகவும், ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் டொலர்களை நாட்டுக்கு கொண்டு வரும் ஒரு முன்மொழிவும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திரு.லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

பிரதி சபாநாயகர் பதவி குறித்து பிரதமர் ரணிலின் பரிந்துரை