உலகம்

சீனாவின் ஒத்துழைப்பினை செயற்கையாக சீர்குலைப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல

(UTV | சீனா) – சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளமையானது எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதற்கு சீனா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவிக்கையில்;

இந்தியா வெளியிட்ட அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம். வெளிநாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களிடம், சர்வதேச சட்டங்களையும், உள்ளூர் சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து நடக்குமாறு சீன அரசு எப்போதும் சொல்லி வருகிறது.

அதுபோல், சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களின் சட்டரீதியான உரிமைகளை உறுதி செய்வது இந்தியாவின் கடமை. இந்தியா-சீனா இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு, இருதரப்புக்குமே நல்லது. ஆனால், இதை செயற்கையாக சீர்குலைப்பது இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

மயோட்டே தீவை தாக்கிய சிடோ புயல் – பலர் பலி – 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

editor

நியூசிலாந்து – ஓக்லாந்து நகரம் மீண்டும் முடக்கம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆங்கில பேராசிரியரானார் ஏ.எம்.எம். நவாஸ்!