உள்நாடு

சீனத் தூதுக்குழுவினர் இலங்கை விஜயம்

(UTV | கொழும்பு) – சீனாவின் முன்னாள் வெளிவிகார அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான Yang Jiechi அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

பூகோள கொரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தெற்காசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் சீனாவின் முதலாவது விஜயம் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதன்படி, உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல் மற்றும் பொருளாதார உறவுகளின் மறுமலர்ச்சி ஆகியவற்றில் இந்த விஜயம் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய, Yang Jiechi தலைமையிலான சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை நாளைய தினம்(09) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 16 பேர் வெளியேறினர்

யாழ்ப்பாணம், மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக அழைப்பு விடுக்கும் சிறீதரன்!

அத்தியாவசிய சேவைகள்; பதிவாளர் திணைக்களத்தின் நடவடிக்கை