உலகம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா

(UTV | சீனா) – சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) நூற்றாண்டு விழா வியாழக்கிழமை காலை பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.

இதன்போது சீன மத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியுமான ஜி ஜின்பிங், பிரமாண்டக் கூட்டத்திற்கு முன்பாகவும், மாவோ சேதுங்கின் உருவப்படத்திற்கு மேலே உள்ள பால்கனியிலிந்தவாறு கட்சியின் வெற்றிகள் குறித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக உரையொன்றை ஆற்றினார்.

அந்த உரையில் அவர், சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியதால், சீனாவின் “கொடுமைப்படுத்தப்பட்ட” சகாப்தம் முடிந்துவிட்டதாகவும், கட்சியையும் சீன மக்களையும் பிரிக்க முயன்ற அனைவரும் தோல்வியுற்றதாகவும் கூறினார்.

அத்துடன் சீனாவின் இராணுவத்தை கட்டியெழுப்புவதாகவும், தாய்வானை மீண்டும் ஒன்றிணைப்பதாகவும், சீனாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில் ஹொங்கெங்கில் சமூக ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சியால் ஈர்க்கப்பட்டு, சீன புரட்சியாளர்களின் குழு 1921 ஜூலை 23 அன்று ஷாங்காய் நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை ரகசியமாக நிறுவியது. அந்த நேரத்தில், சீனா ஒரு வறிய நாடு, உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டது.

இது ஒரு நூற்றாண்டு கால யுத்தம், பஞ்சம் மற்றும் கொந்தளிப்பு ஆகியவற்றுக்கு முகங்கொடுத்தது, மேலும் சமீபத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய போட்டியாளர்களுக்கு எதிராக வல்லரசு நிலைக்கு முன்னேறியுள்ளது.

அதேநேரம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரச அதிகாரத்தை தொடர்ந்து வைத்திருக்கும் உலகின் ஒரே அரசியல் கட்சி ஆகும்.

அரசு, பொலிஸ் முதல் இராணுவம் வரை நாட்டின் முழு கட்டுப்பாடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கையில் உள்ளது.

சுமார் 90 மில்லியன் உறுப்பினர்களுடன், இது ஒரு கோபுரம் போல ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பொலிட் ப்யூரோ மற்றும் அனைத்திற்கும் மேலாக ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளார்.

தேசிய மக்கள் காங்கிரஸ் என்ற பாராளுமன்றம் இருக்கும்போதும் அது கட்சித் தலைமையால் எடுக்கப்படும் முடிவுகளை கேள்வி ஏதும் இல்லாமல் ஆமோதிக்கிறது.

கருத்து வேறுபாடுகளை ஒடுக்க, ஊடகங்கள் மற்றும் இணையத்தின் மீதும் கட்சிக்கு இறுக்கமான பிடி உள்ளது. சீனா மீதான பற்று என்பது கட்சி மீதான பற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

சீனாவில் ஒரு கட்சி அரசுதான் செயல்படுகிறது என்று சொல்லலாம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்கு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளது. பல சிறிய கட்சிகள் இருக்கும்போதும் கூட, அவைகள் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளன.

நிறுவனர் மாவோ சேதுங்கின் கீழ், கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான சர்வாதிகார சோஷியலிசத்தை அமல்படுத்தியது. ஆயினும்கூட ‘முன்னேற்றிச் செல்வதற்கான நீண்ட பாய்ச்சல்’ (The Great Leap Forward) என்ற இயக்கத்தின் பொருளாதார தோல்வி, நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் கலாசாரப் புரட்சியின்போது ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

1976 இல் மாவோ இறந்த பிறகு, டெங் சியாவ் பிங் அமுல் செய்த சீர்திருத்தங்களுடன் நாடு மெதுவாக தேக்க நிலையிலிருந்து வெளியே வந்தது.

தற்போதைய ஜனாதிபதி ஜிஜின்பிங் 2012 இல் ஆட்சிக்கு வந்தார். சீனா உலகளாவிய வல்லரசாக உருவெடுப்பதை அவர் வழிநடத்தி வருகிறார்.

கொவிட் -19 வெடிப்பிலிருந்து சீனா விறுவிறுப்பாக மீண்டு உலக அரங்கில் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதால் சிறந்துள்ளது.

    

Related posts

இந்தியாவில் மேலும் 19 பேருக்கு புதிய கொரோனா உறுதி

லிபியாவிற்கான ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா

கொரோனா வைரஸ் – இத்தாலியில் 24 மணி நேரத்தில் 475 பேர் பலி