கேளிக்கை

சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

(UTV|INDIA)-‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேசிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்கிறார்கள். நயன்தாரா ஏற்கனவே `ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ என்ற படத்தில் சீதையாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கைலா – மர்ம கொலைகளுக்கு விடை தேடி அலையும் நாயகி

அஜித் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

‘ஜானி டெப்பை நான் இன்னும் காதலிக்கிறேன்’