சூடான செய்திகள் 1

சி.வி.விக்னேஸ்வரன் இராஜினாமா செய்தார்!

(UTV|COLOMBO)-வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்த அவர் இந்த கடிதத்தை தனக்கு வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் முதலமைச்சருக்கு இடையில் சுமார் ஒரு மணிநேரம் நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , தான் உருவாக்கிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

 

 

 

Related posts

காணாமல்போன மீனவர்கள் கண்டுபிடிப்பு

தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகளுடன் ஒருவர் கைது

பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்