அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சி.ஐ.டிக்கு செல்ல தயார் என மனுஷ நாணயக்கார நீதிமன்றுக்கு அறிவித்தார்

தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்கக் கோரி மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று அழைக்கப்பட்ட போது, ​​அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு இதனைத் தெரிவித்தார்.

தனது கட்சிக்காரர் நாளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், பின்னர் வேறொரு நாளில் இந்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக அழைக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக மனு எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.

Related posts

பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – பிரதியமைச்சர் முனீர் முலப்பர்

editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

கோப் குழு கூட்டத்தில் ரஞ்சித் பண்டாரவின் மகன் எழும் சர்ச்சை