வகைப்படுத்தப்படாத

சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

(UTV|AMERICA)அமெரிக்காவின் சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து ஊழியர்கள் அவரமாக வௌியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனம் சி.என்.என்.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நியூயார்க் உட்பட பல்வேறு இடங்களில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நியூயார்க்கில் உள்ள அலுவலகத்துக்கு நேற்றரிவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அந்த அழைப்பில் பேசிய நபர், அலுவலக கட்டிடத்தில் ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

வெடிகுண்டு வைக்கப்பட்டதாக விடுக்கப்பட்ட மிரட்டலை அடுத்து, அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீ தடுப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

அலுவலகம் முழுவதும் சல்லடை போட்டு தேடிய பின்னர், வெடிகுண்டு  மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

இதையடுத்து சி.என்.என். நிறுவனம் தனது ஊழியர்களுக்கு  பிரச்சினை எதுவும் இல்லை எனவும் காலை வழக்கம் போல் அலுவலகம் வரலாம் எனவும் தகவல் அனுப்பியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சி.என்.என். நிறுவன கட்டிடத்திற்கு வெளியே வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்

Rishad says “Muslim Ministers in no hurry to return” [VIDEO]

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்கவும்