வகைப்படுத்தப்படாத

சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

 

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் உட்பட்ட 4 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதவான் எம். கணேசராஜாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்துக்குரியவர்களான  சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 04 பேரும் கடந்த 2015 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு -கொலன்னாவ மாநகர சபை   உத்தியோகபூர்வ முடிவுகள்.

සරසවි උපාධිධාරින් 16,800 කට රජයේ පත්වීම්

ஹட்டன் சந்தைப்பகுதி வர்த்தகர்கள் ஆர்பாட்டம்