கேளிக்கை

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சிங்கப் பாதை’?

(UTV |  சென்னை) – சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கு ‘சிங்கப் பாதை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘டான்’. இதனை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட பணிகள் முடிவுக்கு வந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அசோக் இயக்கவுள்ளார்.

முழுக்க கமர்ஷியல் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘சிங்கப் பாதை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் பணிபுரியவுள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related posts

நீச்சல் உடையில் நடிகை ஆண்ட்ரியா!

கொழும்பில் இடம்பெறும் இந்திய சுதந்திர நிகழ்வில் உஷா உதுப்பின் இசைநிகழ்ச்சி

பிரபல நடிகைகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போடும் தனுஷ்!…வைரலாகும் காணொளி