உள்நாடு

சில பகுதிகளுக்கு 13 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பில் பல பகுதிகளில் இன்று(16) இரவு 8 மணிமுதல் 13 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு 9, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று(16) இரவு 8 மணி முதல் நாளை(17) முற்பகல் 9 மணிவரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

மொரட்டுவ உணவக தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

சிறுநீரக மோசடி தொடர்பில் கொழும்பில் சர்ச்சை – விசாரணைகள் ஆரம்பம்

மகிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த தினேஸ் தீவிர முயற்சி