உள்நாடு

சில பகுதிகளுக்கு இன்றும் மின் தடை

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்றுவருவதால் சில நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல பிரதேசங்களில் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்கு மின் பிறப்பாக்கி இயந்திரங்களில் ஒன்றில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படலாம் என்றும் 30 நிமிடங்களுக்கு அதிகமாக மின் தடைப்படாது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

A/L பரீட்சை இன்று ஆரம்பம்- 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்