உள்நாடு

சில தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – கொழும்பிற்கு ஹொரண ஊடாக பயணிக்கும் அனைத்து தனியார் பஸ்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக ஹொரணையில் இருந்து கொழும்புக்கு புதிய சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்ததையடுத்து, இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரணையில் இருந்து கொழும்புக்கு 55 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், அவற்றில் 35 பஸ்கள் நாளாந்தம் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

‘தாங்க முடியாத கடன் சுமைகளை கொண்ட நாடுகளில் இலங்கையும்’

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வு