உள்நாடு

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதும் நிலவுகின்ற இயங்குநிலை தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் காற்று நிலைமையும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் குறைந்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்பட்டதால் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related posts

களுபோவில போதனா வைத்தியசாலை; வார்ட் தொகுதி திறப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கைதி தப்பியோட்டம்

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

editor