உள்நாடு

சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – சீமெந்து, இரும்பு, ஓடுகள், பீங்கான், அலுமினியம் போன்ற அத்தியாவசிய கட்டுமானப் பொருட்கள் சிலோன் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிர்மாணப் பொருட்களின் விலைகள் வர்த்தகர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சு மட்டத்தில் தலையிட்டு விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்காலத்தில் திறைசேரியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 122 பில்லியன் ரூபாவை பல கட்டங்களாக விரைவில் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

அதன்படி, இந்த வருட இறுதிக்குள் 20 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மீதமுள்ள நிலுவைத் தொகைகள் அனைத்தும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு

நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி

கர்நாடக தேர்தலில் வென்றார் ராகுல் காந்தி – ஹிஜாப் அணிவதை நிறுத்திய அமைச்சர் தோல்வி