உள்நாடு

சில அஞ்சல் துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – சில அஞ்சல் துறை தொழிற்சங்கங்கள், நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், உடன் அமுலுக்குவரும் வகையில் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணிக்குழாமினரின் விடுமுறைகளையும் இரத்துச் செய்வதற்கு அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

உடல்நலக் குறைப்பாட்டினால், சேவைக்கு சமுகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில், அரச வைத்திய சான்றிதழ் முன்வைக்கப்பட வேண்டும் என அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

Related posts

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்

WHO இனால் 4 மில்லியன் தடுப்பூசிகள்