உள்நாடு

“சில்லறை தீர்வுகளை மட்டும் வழங்க வேண்டாம்”

(UTV | கொழும்பு) – அவசர திருத்தங்களுடன் 19வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்துவதே மிகவும் காலத்திற்கேற்ற குறுகிய கால தீர்வாக இருக்கும் என தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 19) பாராளுமன்றத்தின் விசேட கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் விரிவான புதிய அரசியலமைப்புத் திருத்தத்துடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கட்சி பேதமின்றி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் மக்களின் ஆசியும் கிடைக்கும் என நம்புவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தாம் விரும்பியவாறு 20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் திருப்தியடையவில்லை எனவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“சில்லறை தீர்வுகளை மட்டும் கொடுக்க வேண்டாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

Related posts

ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் இலங்கை பாதாள உலகமாக மாறியிருக்கும்

editor

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது

மேலும் ஐந்து பேர் விடுதலை