வணிகம்

‘சிலோன் டீ’ சீனாவுடன் கைகோர்த்தது

(UTV | கொழும்பு) – ‘சிலோன் டீ’ நாமத்தில் உற்பத்தி செய்யப்படும் இலங்கையின் தூய்மையான தேயிலையை, சீனாவில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை தேயிலை சபை நேற்று(08) மேற்கொண்டுள்ளது.

சீனாவின் புஜியன் ஸ்டார் சைனா இன்டர்நெஸனல் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய, இணையதளம் ஊடாகவும், அதற்கு புறம்பாகவும் சிலோன் டீயை சீனாவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 4 மில்லியன் கிலோகிராம் தேயிலையை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என தேயிலை சபை எதிர்பார்த்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

குறைந்துள்ள டொலரின் பெறுமதி!

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்