அரசியல்உள்நாடு

சிலிண்டரின் மற்றைய தேசியப் பட்டியலுக்கு கஞ்சனவை தெரிவு செய்ய யோசனை

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான நியமனம் தற்போது கடும் நெருக்கடியாக மாறியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஷியாமலா பெரேரா, தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று முன்வைத்தார்.

இந்நிலையில், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றிரவு வர்த்தமானி ஊடாக அறிவித்தது

இதவேளை புதிய ஜனநாயக முன்னணியின் மற்றைய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின், அலுவலகத்தில் இன்று (19) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

Related posts

பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும்.

ஊரடங்கு உத்தரவை மீறிய 602 பேர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தி : சந்தேக நபர் கைது