அரசியல்உள்நாடு

சிலர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய ஜே.வி.பி அரசாங்கம் ஊடகங்களுடன் நல்லுறவைப் பேணி அரசியல் பரப்பில் உச்சத்தை தொட்டனர்.

ஜே.வி.பியை வலுப்படுத்துவதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் எமது நாட்டின் சுதந்திர ஊடகங்கள் பாரிய பங்காற்றியுள்ளன.

எதிர்க்கட்சியில் இருந்த போது ஊடகங்கள் மீது ஜே.வி.பி கொண்டிருந்த அணுகுமுறையும், ஆளுந்தரப்பாக கொண்டிருக்கும் அணுகுமுறையும் வேறுபட்டது.

அரசாங்கமும், மக்கள் விடுதலை முன்னணி கட்சி அலுவலகத்தின் உத்தரவுகளின் பிரகாரம் ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு செயற்படாத ஊடகங்கள் சேறுபூசும் ஊடகங்கள் என குத்திரை குத்துகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் எமது நாட்டின் சுதந்திர ஊடகங்களை அகௌரவப்படுத்துகிறது.

உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக சுதந்திர ஊடகங்கள் காணப்படுகின்றன. இந்த சுதந்திர ஊடகத்தை அவ்வாறே பேணுவது ஜனநாயகத்தை பாதுகாக்கும் பெரும் கருவியாகும்.

இன்று சுதந்திர ஊடகங்கள் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பேசும் போது, உண்மையான செய்திகளை வெளியிடும் போது, அரசாங்கமும் மக்கள் விடுதலை முன்னணி கட்சி அலுவலகமும் தடமாறி வருகின்றன.

அரசாங்கம் மற்றும் பெலவத்தை கட்சி அலுவலகத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடும் போது ஊடகங்களை இவர்கள் அகௌரவப்படுத்தி நடந்து வருகின்றனர்.

சுதந்திர ஊடகம் கட்சி நலனுக்கு அப்பாற்பட்டது. அது உண்மையையே சொல்லும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டுக்காகவும், இரானுவ வீரர்களுக்காகவும் பேச ஊடகங்களுக்கு உரிமை உண்டு. இது சாதாரண மக்களின் உரிமையும் கடமையும் கூட. சர்வதேச ரீதியில் இராணுவ வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது சிலர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மொறட்டுவை வட்டார வேட்பாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையில் குறைவு

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு

பவித்ரா வன்னியாராச்சிக்கு புதிய பதவி