வகைப்படுத்தப்படாத

சிறை அருகே சசிகலா தரப்பு வாகனங்கள் மீது தாக்குதல்!… காவற்துறை தடியடி!

(UDHAYAM, CHENNAI) – பெங்களூரில் சசிகலா சென்ற சிற்றூர்ந்துடன் சென்ற சிற்றூர்ந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் தாக்குதில் சிற்றூந்துகளின் கண்ணாடிகள் உடைந்துள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைவதற்காக சென்ற போது இந்தத் தாக்குதல் நடந்தது.

சசிகலாவிற்கு உடைகள் கொண்டு வந்த சிற்றூந்து மீது திடீரென்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

சசிகலாவுடன் வந்த தமிழக பதிவெண் கொண்ட மேலும் 4 சிற்றூந்துகள் மீதும் ஏறிய சிலர் கடுமையான தாக்குதல் நடத்தினர்.

இதனால் சிற்றூர்ந்தின் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. காவற்துறையினர் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related posts

அனைவருக்கும் வாக்குரிமை பொதுவானதே – மஹிந்த தேசப்பிரிய

அனுர சேனாநாயக்க வீடு திரும்பினார்

Iran nuclear deal: Enriched uranium limit breached, IAEA confirms