வகைப்படுத்தப்படாத

சிறையில் நைட்டியுடன் சுற்றிவந்த சசிகலா.. வைரலாகும் காணொளி!

(UDHAYAM, COLOMBO) – பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் தண்டனை அனுபவித்து சசிகலா, சிறைக்குள் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அதற்காக உயர் அதிகாரிகளுக்கு இந்திய ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் சிறை அதிகாரி ரூபா உள்துறை, சிறைத்துறை டிஜிபிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு உண்டானது.

இதனால், கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார்.

இந்நிலையில், சிறையில் ஆய்வு செய்த சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண ராவ் உள்பட உயர் அதிகாரிகள் சிறையிலிருந்த சிசிவிடி காட்சிகளை அழித்து வருவதாக ரூபா இரண்டாவது அறிக்கையை எழுதினார்.

இந்த அறிக்கையையும் ஊடகங்களில் வெளியானது. இரகசிய விசாரணை இதெல்லாம் ரூபாவிடமுள்ள ஆதாரங்கள்தான் என கூறப்படுகிறது.

அவர்தான் மேலதிகாரிகளை நம்பாமல் ஊடகங்களில் கசியவிட்டுள்ளாரா என்ற கோணத்தில் முதல்வர் அறிவுரையின்பேரில் உளவுத்துறை அதிகாரிகளின் இரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், மாலை நேரத்தில் சசிகலா நைட்டி உடையுடன் வலம் வரும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

எந்த கைதிக்கும் இந்த வசதி செய்து தரப்படவில்லையாம். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

[ot-video][/ot-video]

Related posts

பௌத்த கொடியை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை

உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது வழக்கு

Water cut in Rajagiriya and several areas