உள்நாடு

சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் – சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை(20) இடம்பெற்றுள்ளது.

28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்து வரும் போது இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

தப்பி சென்ற சந்தேக நபர் சம்மாந்துறை உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த ரிசாட் முகம்மட் சாதிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 2024.12.07 திகதி குறித்த சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

தனக்கு உள்ள ஒரேயொரு சவால் – நாமல்

editor

கொரோனா : மேலும் 5 பேர் பலி

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில்