(UTV|கொழும்பு) – சிறைச்சாலை கைதிகள் 5000 பேருக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நன்னடத்தை மற்றும் விடுதலை பெறவுள்ள கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தொழில்நுட்பத்துறை மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய துறைகளில் அவர்களை ஈடுபடுத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரச மற்றம் தனியார் நிறுவனங்களில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.