சூடான செய்திகள் 1

சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

(UTVNEWS|COLOMBO ) – வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின், சிறைச்சாலை அதிகாரி கொலை செய்யப்படுவதற்கு, மோட்டார் சைக்கிள் வழங்கி உதவி புரிந்த குற்றச்சாட்டில் மற்றுமொருவர் ஹிக்கடுவையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பன்னல பகுதியைச் சேர்ந்த 25 வயதான குறித்த சந்தேநபர் இன்று (22) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி அம்பலாங்கொட – குலீகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து வெளியேற்றம்

டுவிட்டர் இரகசிய இலக்கங்கத்தை உடனடியாக மாற்ற வேண்டுகோள்

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை