உள்நாடு

சிறைச்சாலையில் இருந்து 2691 கைதிகள் விடுவிப்பு

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தண்டப்பணம் செலுத்தமுடியாமை, பிணை வழங்கப்பட்டிருந்த போதும் பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்தமுடியாமை, மிகவும் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனைக் காலத்தில் பெரும் பகுதியை நிறைவு செய்துள்ள, மிகவும் பாரதூரமான சுகாதார காரணங்களினால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையிலிருப்பவர்கள் மற்றும் பிணை வழங்குதல் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படாத சிறைக்கைதிகள் தொடர்பில் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சிறைக்கைதிகளுக்கான இடவசதி பத்தாயிரம் பேருக்கானதாகும். எனினும் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறைக்கைதிகளாக உள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளும் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்

நாமல் குமாரவின் தொலைபேசி, பணம் கொள்ளை: உரியவர்கள் கைது

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிரதமரிடமிருந்து ஒரு செய்தி