சூடான செய்திகள் 1

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஒருவர் தாம் விரும்பும் விதத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடிய உரிமை நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளின் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் எதனையும் மாற்ற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார். இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தைப் போன்று ஆர்ப்பாட்டம் செய்வோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட மாட்டாது. மிகவும் நிதானமான முறையில் சிந்தித்து தீர்வு காண வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. எனினும்இ சிறைச்சாலைகளுக்குள் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளுக்கு இடையில் சண்டை நடந்துள்ளது. இந்தச் சண்டையில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

பஸ் வண்டிகளில் ஒலிக்கின்ற பாடல்களை ஒழுங்குறுத்த நடவடிக்கை

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கும் சாத்தியம்