உள்நாடு

சிறைக் கைதிகளை பார்வையிட மீண்டும் அனுமதி

(UTV|கொழும்பு) – சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வாரத்திற்கு ஒருவரை மாத்திரம் அனுமதிக்கவுள்ளதாகவும் கைதிகளால் பெயர் வழங்கப்படும் நெருங்கிய உறவினருக்கு மாத்திரமே அவர்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை உணவுப்பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பொருட்களை மாத்திரம் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெலிக்கடைச் சிறைசாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பால் மா விலை அதிகரிப்பு

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம்

புதனன்று நாடு திரும்பும் கோட்டா