உள்நாடு

சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல்!

(UTV | கொழும்பு) –  தற்போது அதிகரித்து வரும் வெப்பமான காலநிலையினால் சிறுவர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தமது குழந்தைகளை குறைந்தது 20 நிமிடங்களாவது நீராடச்செய்வது அவசியமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்கள் மத்தியில் தோல்நோய்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உடலில் நீரிழப்புக்கான சாத்தியமும் அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எளிய ஆடைகள், இயற்கை பானங்களை வழங்குதல் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வியாழனன்று விமான நிலையங்கள் திறக்கப்படும்

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024

தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்