உலகம்

சிறுவர்களுக்கும் பைசர்

(UTV | அமெரிக்கா, வொஷிங்டன்) – அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் பல தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. எனினும் வயதானவர்கள், நடுத்தர வயதினருக்கு மட்டுமே இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் 12 -15 வயதுள்ள சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்த பைசர் தடுப்பூசி நிறுவனம் அனுமதி கேட்டிருந்தது. தற்போது இதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ்- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர்

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு கொரோனா