சூடான செய்திகள் 1

சிறுவர்களுக்கான தேக்கநிலை வரியை முழுமையாக நீக்க அரசாங்கம் தீர்மானம்

(UTV|COLOMBO)-18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குகளில் இருந்து அறவிடப்படும் ஐந்து சதவீதமான தேக்கநிலை வரியை முழுமையாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்து சிறுவர் சேமிப்புக் கணக்குகளின் வட்டி வருமானம் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தத் தேக்கநிலை வரி அறவிடப்பட்டது.

 

அமைச்சர் மங்கள சமரவீர யோசனைக்கு அமைய இந்த வரியை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக தற்போது அறவிடப்படும் எழுத்தாளர் உரிமை வரியின் மாதாந்த வருமானத்தை 50 ஆயிரம் ரூபாவரை விடுவிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வருமானம் அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 14 சதவீத வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மகேஸ் நிஸ்ஸங்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்