உள்நாடு

சிறுவர்களின் தோலில் பல்வேறு உபாதைகள் – பெற்றோர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் சிறுவர்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவி பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப சந்தையில் கிடைக்கும் தரக்குறைவான சவர்க்காரர்களை பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக கொள்வனவு செய்கின்றனர்.

விலைவாசி குறிவைத்து சில குழுக்கள் நுகர்வோரை ஏமாற்றி தரமற்ற சவர்க்காரர்களை சந்தையில் சேர்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தரநிலைகள் பணியகத்தால் சான்றளிக்கப்பட்ட குழந்தை சவர்க்காரர்களை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு தோல் சிக்கல்களைக் கொண்ட சிறுவர்களை பற்றி அறிந்தோம். அதனால்தான் சிறுவர்களின் தோலுக்கு பொருந்தாத தரமற்ற சவர்க்காரர்களை பயன்படுத்தக் கூடாது.

நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் தரமற்ற சோப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை குழந்தைகள் சந்திக்க நேரிடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சிறுவர்களுக்கான சவர்க்காரர்களில் 78 சதவீத்திற்கும் அதிகமான TFM இருக்க வேண்டும். தரநிலைகள் பணியகம் தேவையான அளவு TFM கொண்ட சவர்க்காரர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து தரமான சவர்க்காரர்களை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவி பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவின் உறவுநிலை கைவிட்டுபோன இடத்தில் இருந்து தான் நாம் மீள தொடங்கப்பட வேண்டும்…..!

இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான விமான போக்குவரத்து இடைநிறுத்தம்

பிரதமரின் செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க