வகைப்படுத்தப்படாத

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது

(UTV|KILINOCHCHI)-கடந்த 23 ம் திகதி மாலை கிளிநொச்சி  கரடிப்போக்கு சந்தியில்  சிறைக்காவலர்கள் பயணித்த  சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில்  துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தான்.

குறித்த விபத்து ஏற்ப்பட  துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து சிறு  காயங்களுடன்  உணவகம் ஒன்றினுள் நின்ற சிறுவனை சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சரமாரியாக தாக்கியமை புகைப்படம் மற்றும்  ஒளிப்பதிவு மூலம் ஊடகங்களில் வெளிவந்திருந்தன.
இதன் பிரகாரம் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில்  யாழ் சிறைச்சாலை காவலர்கள் நால்வர் இன்று கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சற்றுமுன் கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி உள்ளனர்

தாக்கப்பட்டதனை நேரில் கண்ட சாட்சியாக கிளிநொச்சி சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரது வாக்கு மூலமும் கிளிநொச்சி பொலிசாரால் கோரப்பட்டுள்ளதுடன் அவரின் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட கானோளியும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ்.என்.நிபோஜன்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வில்பத்துக் காடுகளை அமைச்சர் றிஷாட் அழித்ததாக பொய்ப்பிரச்சாரம்.

வடகொரியாவின் புதிய ஏவுகணையில் அணு ஆயுதங்கள்!

பேஸ்புக் பாவனையாளர்களுக்கான ஓர் முக்கிய செய்தி..!!